2007 முதல் தலைமுறை ஐபோன் ஏலத்தில் ரூ 2.29 கோடி விலைக்கு விற்கப்பட்டது

2007ஆம் ஆண்டு அதன் சீல் வைக்கப்பட்ட முதல் தலைமுறை ஐபோன்,  ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த ஒரு முதன்மை ஏலத்தில் $63,356 (ரூபா 2.29 கோடி) விற்பனையானது. இது தொலைபேசி விற்னையில் இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும்.

நியூ ஜெர்சியில் உள்ள பச்சைக் குத்தும் கிரீன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  கிரீன் தனது ஸ்டுடியோவிற்கு பணம் தேவைப்படுவதால் கடந்த ஆண்டுகளில் ஐபோனை விற்பதாக முடிவு செய்துள்ளார்.   2007ஆம் ஆண்டு முதல் தலைமுறை  ஐபோன் 40,000டொலர்களுக்கு விற்கப்பட்ட மற்றொரு ஐபோன் பற்றி கேள்விப்பட்ட பிறகு அவர் அக்டோபரில் LCG ஏல நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுமேலும் இந்த ஐபோனை பெப்ரவரி 2முதல் பெப்ரவரி 19வரை ஏலத்தில் விடப்பட்டது. குறைந்தபட்சம் $50,000க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது,  ஏலம் $2,500இல் தொடங்கியது,  ஆனால் அது அதன் அசல் விலையை விட 100மடங்குக்கு மேல் சென்றது.

ஸ்டீவ் ஜாப்ஸ் 16ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி மாதம் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மேக்வேர்ல்ட் மாநாட்டில் ஐபோனை அறிமுகப்படுத்தினார். ஏப்பிள் தனது முதல் ஐபோனை $599க்கு விற்றது (ரூபா 2,16,975.45).


Add new comment

Or log in with...