மாணவர்களிடையே மோதல்; சப்ரகமுவ பல்கலைக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

- 2020/2021 வருட மாணவர்களை தவிர அனைவரையும் வெளியேற உத்தரவு

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 வருட மாணவர்களைத் தவிர ஏனைய அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏனைய அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதிகளிலிருந்து இன்று (16) பி.ப. 4.00 மணிக்குப் முன்னர் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...