145 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் கைது

- மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பு

பதுளை, விகாரகொட பிரதேசத்தில், 145 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஒருவரை பசறை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (14) இரவு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், பதுளை வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியர் பதுளை, மைலகஸ்தன்னவில் உள்ள அவரது தனியார் மருத்து நிலையத்தில் பாடசாலை மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு குறித்த போதை மாத்திரையை வழங்குவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை இன்றையதினம் (15) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


There is 1 Comment

Add new comment

Or log in with...