ரொனால்டோ 500 கோல்

சவூதி ப்ரோ லீக்கில் அல் நாசிர் கழகம் சார்பில் நான்கு கோல்களை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கழக மட்ட கோல்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 38 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ரொனால்டோ வியாழனன்று நடந்த அல் வஹ்தா அணிக்கு எதிரான போட்டியில் 30 நிமிட இடைவெளிக்குள் நான்கு கோல்களை புகுத்தியதன் மூலம் அல் நாசிர் 4–0 என்ற கோல்களால் வெற்றியீட்டியது.

இதன்மூலம் ரொனால்டோ ஐந்து வெவ்வேறு லீக்குகளில் ஐந்து கழகங்களுக்காக மொத்தம் 503 கோல்களை பெற்றுள்ளார். இதில் மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக 103 கோல்களை பெற்ற ரொனால்டோ ரியல் மெட்ரிட்டுக்கு 311 கோல்கள், ஜுவான்டஸுக்கு 81 கோல்கள் மற்றும் ஸ்போட்டிங் லிஸ்போன் அணிக்கு மூன்று கோல்கள் மற்றும் அல் நாசிருக்கு ஐந்து கோல்களை பெற்றுள்ளார்.

ரொனால்டோ கடந்த டிசம்பரில் 200 மில்லியன் யூரோவுக்கு அல் நாசிருடன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒப்புந்தம் செய்து கொண்டார்.


There is 1 Comment

Add new comment

Or log in with...