துப்பாக்கிகளை ஒப்படைக்க மார்ச் 15 வரை அவகாசம்

- அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கையளிக்க முடியும்
- தண்டம் அல்லது தண்டப்பணம் அறவிடப்படாது
- வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவிப்பு

அனுமதிப்பத்திரம் அற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கையளிப்பதற்கு, மார்ச் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2318/02 எனும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 06ஆம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி வரை இந்த அவகாசம் வழங்கப்படுவதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால எல்லைக்குள் அனுமதிப்பத்திரமின்றிய துப்பாக்கிகளைக் கையளிக்கும் போது கையளிக்கும் திகதிக்கு முன் அத்துப்பாக்கியினை தம் வசம் வைத்திருத்தல் அல்லது பயன்படுத்தியதன் காரணமாக துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் சரத்திற்கு முரணான ஏதாவது குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டம் அல்லது தண்டனைக்கு துப்பாக்கியை கையளித்த நபரை உட்படுத்தக் கூடாது என அதில் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அனுமதிப்பத்திரமின்றிய துப்பாக்கிகளை அண்மித்த பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

PDF icon 2318-02_T.pdf (91.44 KB)

PDF File: 

Add new comment

Or log in with...