துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து வீழ்ந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தின் பின்னர் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஜிண்டாய்ரிஸ் என்ற சிறிய நகரத்தில் நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து பிறந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையை இன்னும் ஒரு மணி நேரம் வைத்திருந்தால், “அவள் இறந்திருப்பாள்” என்று குழந்தையைப் பராமரிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை இன்னும் தொப்புள் கொடி மூலம் தன் தாயுடன் இணைந்திருந்ததைக் மீட்புப் பணியினர் அவதானித்து இவ்வாறு பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தில் குழந்தையின் தாய், தந்தை அவர்களது நான்கு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment