வர்த்தகக் கிரிக்கெட்டுக்கு டேவிட் பீரிஸ் அனுசரணை

வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கு தொடர்ச்சியாக 20ஆவது வருடமாகவும் டேவிட் பீரிஸ் குழுமம் அனுசரணை வழங்குகிறது.

உத்தியோகபூர் அனுசரணையை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் வர்த்தக கிரிக்கெட் சம்மேளத்தில் இடம்பெற்றது. இதில் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் பணிப்பாளர் திருமதி ரோமனி பராக்கிரம, வர்த்தக கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் நளின் விக்ரமசிங்க உட்பட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

அண்மையில் ஆரம்பமான இந்த சுற்றுப்போட்டியில் பல வர்த்தக நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. டேவிட் பீரிஸ் குழுமம் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...