அசறிக்கம அல் - அக்ரம் பாலர் பாடசாலை 2023ஆம் ஆண்டுக்கான கலைவிழா

அநுராதபுரம், அசறிக்கம அல் -அக்ரம் பாலர் பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் அசறிக்கம முஸ்லிம் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றன.

மாணவன் எஸ். சாஹிட் அஹமட் கிராத் ஓதி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன். தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.பாலர் பாடசாலை ஆசிரியை சார்பில் அசறிக்கம முஸ்லிம் வித்தியாலய அதிபர் அவுபக்கர் மொஹமட் நியாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.இம்முறை பாலர் பாடசாலையை விட்டு விலகி முதலாம் தரத்திற்கு சேரவிருக்கும் மாணவர்களின் வரவேற்பு நடன கீதத்துடன் அரங்கேற்றப்பட்டது.

அசறிக்கம பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டதுடன் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் இவ்வாண்டு அசறிக்கம முஸ்லிம் வித்தியாலயத்தில் இணையவிருக்கும் 18 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் இம்மாணவர்களுக்கான சான்றிதழ்களை வர்த்தகர் ஜே.ஏ.முபாரக் வழங்கியிருந்தார்.

கஷீதா, கதைகள், தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில தனி, குழு பாடல்கள் மற்றும் நடனங்கள் என சிறுவர்களினால் அரங்கேற்றப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் அரங்கை அழகுபடுத்தின.

பாலர் பாடசாலையின் ஆசிரியை அப்துல்லா பாத்திமா மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிருந்தமையினால் மேடைகளில் அரங்கேறிய அனைத்து நிகழ்வுகளையும் அதிதிகள், பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் மெய்மறந்து ரசித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதிதிகளாக கலந்து கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் ஜே.அமான் கல்வியின் மகிமை பற்றி உரையாற்றியதுடன், ஜே.உபைதுல்லாஹ் (மெளலவி) சமூகத்தின் விடிவு பற்றியும், மத்திய நுவரகம் பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜே.ஏ.முசாதிக் பாலர் பாடசாலை கல்வி பற்றியும் உரையாற்றினர்.

அசறிக்கம பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவர், ஜாமிஉஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் பொருளாளரும் ஊடகவியளாளருமான எம்.ரீ.ஆரிப் மற்றும் ஆர். றஸ்மின் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தனர். இறுதியாக மாணவர்கள், அதிதிகள், பெற்றோரின் ஸலவாத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...