துருக்கி, இஸ்ரேல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு

இலங்கையில் உள்ள துருக்கி தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சர்வெட் ஒகுமஸ் (Servet Okumus) இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரணவை நேற்றுமுன்தினம் (06) விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையிலான பரஸ்பர விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின்பின்பு, இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்களும் பரிமாறப்பட்டன.

இதேவேளை, இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி (Colonel Avihay Zafrany) இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரணவை கடந்த நேற்று முன்தினம் விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றிய கலந்துரையாடலின் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன.


Add new comment

Or log in with...