உயர், மேன்முறையீட்டு நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் 

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் கே.பி பெனாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (06) காலை கொழும்பு, கோட்டையிலுள்ள  ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

குறித்த நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைகளுக்கும் அரசியலமைப்புப் பேரவை அண்மையில் ஏகமனதாக அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...