சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

2023 ஜனவரியில் 1,00,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,02,545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின்...

ஜனவரி 2022 இல் பதிவாகிய 82,327 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 20,218 சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து 25,254 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 13,759 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,483 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, மாலைதீவு மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஜனவரி மாதத்துக்கான மீதமுள்ள மூல சந்தைகளாகுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...