பாராளுமன்ற பணியாளர்களின் கிரிக்கெட்: 'வன்டுவன்' வெற்றி

பாராளுமன்ற பணியாளர்களின் திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் ரமேஷ் மலிந்த நாணயகார தலைமையிலான 'வன் டு வன்' அணி வெற்றிபெற்றதோடு தியவண்ணா ரைடர்ஸ் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. பாராளுமன்ற விளையாட்டு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி பத்தரமுல்லை ஜீ.எச் புத்ததாச மைதானத்தில் நடைபெற்றது.

இதில்; பெண்களுக்கான கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் 'கோல்டன் பிளேம்ஸ்' வெற்றியீட்டியது. அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர்களின் கிரிக்கெட் அணி மற்றும் ஏற்பாட்டாளர் அணிக்கு இடையிலான நட்புறவுப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றிபெற்றது.

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...