கோதுமை, சிவப்பரிசி, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் விலைகள் குறைப்பு

- இன்று முதல் ச.தொ.ச.வில் பெறலாம்

லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது.

அதற்கமைய, இன்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

ஒரு கிலோ செத்தல் மிளகாய் 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1,675 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 165 ரூபாவுக்கும், உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 169 ரூபாவுக்கும், கோதுமை மா 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

PDF icon Sathosa-Price-Reduced.pdf (466.4 KB)

PDF File: 

Add new comment

Or log in with...