குளிர்காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை

குளிர்காலமானது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்திலும், சரும பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இக்காலகட்டத்தில் கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாகப் பேணுவது தாய்-சேய் நலன் காக்கப் பெரிதும் உதவும்.

குறிப்பாகக் குளிர்காலத்தில் தாகம் குறைவடையும். அதற்காக அடிக்கடி நீரைப் பருகுவதைத் தவிர்க்கலாகாது. அது கர்ப்பிணிகளுக்கு தீங்குகளை ஏற்படுத்தலாம். குளிர்ந்த காற்றினால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்கவென தண்ணீரை உரிய அளவில் அவ்வப்போது பருக வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் கருத்தாகும்.

உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையாலும் குளிர்ந்த சூழலாலும் உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவடையக்கூடிய சாத்தியமுள்ளது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உடலில் நீர்ச்சத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் குளிர்காலத்தில் உண்ணும் உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளவென பழ வகைகளையும் மரக்கறிகளையும் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. என்றாலும் எண்ணெய் நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக எண்ணெய் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது அமிலத்தன்மை பிரச்சினைகளை ஏற்படுத்த இடமுள்ளது.

அத்தோடு அதிக இனிப்பு பண்டங்களை உண்பதும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் அவ்வகை உணவு வகைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தத் தவறலாகாது.

இல்லாவிடில் அது உடலில் நீரிழப்புக்குக் காரணமாக அமைந்து கர்ப்ப காலத்தில் நெருக்கடிகளுக்கு வித்திடவும் முடியும்.

மேலும் கர்ப்பக் காலத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி ஆரம்பம் முதலே குறைவடையும். அதிலும் குளிர்காலங்களில் இது மேலும் பலவீனமடையும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்பம் முதல் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது தாய் - சேய் இருவருக்கும் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும்.

அதேநேரம், கர்ப்பகாலத்தில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதிலும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். குளிர்காலம் போன்ற சூழலில் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுமாயின் வீட்டினுள்ளே எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும்.

பொதுவாக உடல் கர்ப்ப காலங்களில் சூடாக இருக்கும். அதனால் குளிரிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளக்கூடிய ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பநிலையைச் சீராகப் பேண முடியும்.

இவ்வாறான விழிப்புணர்வுகளுடன் செயற்பட்டும் குளிர் காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். இவற்றை ஒருபோதும் மறக்கலாகாது. ஆரோக்கியமான முறையில் கர்ப்ப காலத்தை அனுபவிக்க சிறந்த வழிகள் இவையே.

கர்ப்பக் காலத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி ஆரம்பம் முதலே குறைவடையும். அதிலும் குளிர்காலங்களில் இது மேலும் பலவீனமடையும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்பம் முதல் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்


Add new comment

Or log in with...