75 ஆவது சுதந்திர தினத்தையிட்டு கரு ஜயசூரியவுக்கு ஸ்ரீலங்காபிமான்ய விருது

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நாட்டின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமானிய விருது வழங்கப்படவுள்ளது.

இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் எட்டாவது நபரென்ற பெருமையை 82 வயதான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பெற்றுள்ளார். 1986 இல், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த விருதை முதன்முதலிலும் 2017 ஆம் ஆண்டு டபிள்யூ.டி.அமரதேவ இறுதியாகவும் இந்த விருதைப் பெற்றிருந்தனர்.

பெப்ரவரி மாதம் (03) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விருதை கரு ஜயசூரியவுக்கு வழங்கவுள்ளார். 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி சந்தர்ப்பத்தில் முக்கிய பங்கு வகித்தமைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்படவுள்ளது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் பொதுப் பதவியிலிருந்து விலகி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை ஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...