சமூகத்தின் நிலைபேறான முன்னேற்றம் கல்வி மறுமலர்ச்சியிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில் சியம்பலாகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரி காலத்தின் தேவை உணர்ந்து ஆன்மிகக் கல்வியையும் பொதுக் கல்வியையும் கடந்த 32 வருடங்களாக வழங்கி வருகிறது என்று சியம்பலாகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபர் சேகுதாவுத் முனவ்வர் (தீனி, பின்னூரி) தெரிவித்தார்.
சியம்பலாகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக் கல்லூரியின் 27 வது பட்டமளிப்பு விழா அதிபர் சேகுதாவுத் முனவ்வர் (தீனி, பின்னூரி) தலைமையிலும் ஏ. எச்.எம். ஹனிபாவின் வழிகாட்டலுடனும் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய அதிபர் சேகுதாவுத் முனவ்வர் (தீனி, பின்னூரி) இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி, பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத்துறைப் பேராசிரியர் சலீம், வைத்திய அதிகாரி சாபி, நாப்பாவெல பௌஸிய்யா அரபுக் கல்லூரி அதிபர் ஜிப்ரி ஹஸ்ரத், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் உமர்தீன், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் உப தலைவர் ஹாசிம் நூரி, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஆலிம்கள் பிரிவு செயலாளர் நவ்பர் கபூரி, குருநாகல் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் சுஐப் தீனி உள்ளிட்ட இன்னும் பல உலமாக்களும் கௌரவ அதிதிகளாக பல வர்த்தகப் பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.
இதன் போது அல் ஹாபிழ் ஹுமைத் (நூரி) எனும் மாணவன் எழுதிய 'பெரிய ஹழ்ரத் வாழ்வியல்' எனும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்நூல் பற்றிய வெளியீட்டு உரையினை இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் ஆலோசகர் அஹமட் முனவ்வர் நிகழ்த்தினார். இதன் போது பெரு எண்ணிக்கையிலான பெற்றோர்கள் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு தொடர்ந்து பேசும் போது,
1990 களின் முற்பகுதியில் எமதூர் ஜலாலுல்லாஹ் ஜும்ஆ மஸ்ஜிதின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஊர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட நிருவாக சபை மூலம் இயங்கத் தொடங்கி பல சவால்களைத் தாண்டி வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது.
இக்கல்லூரியின் அடைவுகளாக 32 ஆண்டுகளில் 275 ஆலீம்களையும், 290 ஹாபிழ்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அவர்களில் 50 மாணவர்கள் பல்கலைக்கழக பட்டம் பெற்ற மாணவர்களாகவும் 8 மாணவர்கள் பட்டப்பின்படிப்புப் பெற்ற மாணவர்களாகவும் ஒருவர் எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற மாணவர்களாகவும் உயர் நிலை அடைந்துள்ளனர். மதீனா பல்கலைக்கழகம் சென்று அங்கு கல்வி பயின்று அதிகமான பட்டதாரி மாணவர்கள் வெளியாகி இருக்கின்றார்கள்.
இன்று இக்கல்லூரியின் முழு நேர மற்றும் பகுதி நேர 40 பேரைக் கொண்ட ஆசிரியர் குழாமையும் 225 மாணவர்களையும் கொண்டு இயங்கி வருகின்றன.
இங்கு கல்வி கற்று வெளியேறியவர்களில் 12 பேர் அரச மற்றும் தனியார் அலுவலங்களில் கடமைபுரிகின்றனர். 46 பேர் மத்ரஸாக்களில் ஆசிரியர்களாக கடமைபுரிகின்றனர். 11 பேர் பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமை புரிகின்றனர். ஒருவர் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமை புரிகின்றார். 54 பேர் பள்ளிவாசல்களில் இமாம்களாக கடமை புரிகின்றனர். ஒருவர் அரச ஆயுர்வேத வைத்தியராக கடமையாற்றுகின்றார். 52 வெளிநாட்டு அலுவலக அதிகாரிகளாக தொழில் புரிகின்றனர். 41 பேர் உள்நாட்டில் தொழில் அதிபர்களாகவும் வியாபாரிகளாகவும் உள்ளார்கள். 34 பேர் பட்டப் பின்படிப்புக்களை தொடர்ந்து உயர் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரபுக் கல்லூரி ஆரம்ப காலத்தில் இருந்து இது வரையிலும் ஒரே ஒரு தலைவர் அவர்தான் ஆயுட்காலத் தலைவராக இருக்கிறார். அதேபோன்றுதான் அதன் நிர்வாகிகளும். 20 வருட காலமாக இருக்கின்றார்கள். இதற்காக பல வகையிலும் எல்லோருடைய முயற்சிகளும் இருந்து வருகின்றன.அண்மையில் மத்ரஸாப் பயன்பாட்டுக்காக ஒரு வாகனத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சி எடுத்தோம். அதனைப் பெற்றுத் தந்துதவியதும் ஊர்மக்கள் தான். இந்த மத்ரஸாவில் உலமாக்களை வெளிக் கொணர்வதில் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் முயற்சிகளை மேற்கொண்டோம்.
அந்த வகைளில் தலைவர் ஹனிபா ஆசிரியர் உட்பட மர்ஹும்களாக மௌசூர், மர்ஹும் தாஜுதீன் எனது தந்தை சேஷ தாவூத். மர்ஹும் அப்துல் லத்தீப். மர்ஹும் நவாஸ் சேர் மர்ஹும் அஸீஸ் மர்ஹும் அப்துல் காஸிம், ஹாஸிம் இப்படிப்பட்ட பலர் ஆரம்பத்தில் முயற்சி எடுத்தமையினால் இன்று இந்தக் கலாபீடம் உயர்ந்து வளர்ச்சியடைந்து நிற்கின்றது. அக்கால கட்டத்தில் என்னையும் ஓர் அதிபராக அழைத்தார்கள். அன்று முதல் இன்று வரையிலும் அதிபராக கடமையாற்றி வருகின்றேன்.
இக்கலாபீடத்தின் அழகிய தோற்றத்திற்கு மூல காரணமாக அமைந்தவர் எமது நிருவாகத் தலைவர். அத்துடன் அழகான தோட்டங்கள் கட்டடங்கள் உருவாவதற்காக ஜிப்ரி ஹஸ்ரத் முக்கியமானவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்.அஹமட் லெப்பை ஹாஜியார் மத்ரஸா நடத்துவதற்கு காணி தேவையா எனக் கேட்டு 40 பேர்ச்சஸ் காணியை நன்கொடையாக வழங்கினார். இலங்கையிலுள்ள பல மத்ரஸாக்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஜிப்ரி ஹஸ்ரத் அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது.
இங்கு பல தரப்பட்ட மூத்த உலமாக்கள் இருக்கிறார்கள். இவர்கள் பற்றி அவர்களுடைய மாணவர்கள் எழுத வேண்டும். உமைத் என்ற மாணவன் தன்னுடைய ஆசான் அவர்கள் பற்றி மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.இந்த நாட்டில் என்னைக் கவர்ந்த ஆலீம்களில் முனவ்வர் ஹஸ்ரத் சிறப்பிடம் பெறுகின்றார். குறிப்பாக அவரது பண்புகளால் பெரிதும் கவரப்பட்டவன் நான். எப்போதும் மலர்ந்த முகத்தோடு இருப்பார். அடக்கமும் அமைதியும் அவரது சிறப்புக் குணங்கள். விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் அவர் முன்னுதாரணமானவர் என்று எழுதியுள்ளார். அது இஸ்லாத்திற்கு உரிய பண்பாகும்.
குருநாகல் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர்
அந்நூரியின் ஆரம்ப காலங்களோடும் இன்று வரையிலும் தொடர்பு கொண்டவன் என்ற வகையில் உண்மையிலே முனவ்வர் ஹஸ்ரத் அவர்களின் சேவை மகத்தானது கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடு படும் ஒருவராக நான் கண்டிருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உப தலைவர் உமர்தீன்
முதிர்ந்த வயதிலும் எங்கெல்லாம் பயணம் செய்து மத்ஸாவை வலுப்படுத்த வேண்டுமோ அதற்காக தனது நேர காலத்தை ஒதுக்கி பல உலமாக்களையும் ஹாபிழ்களை வெளிக்கொணர்வதற்கு காரணமாக அமைந்துள்ளார்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் களுத்துறை மாவட்டத் தலைவர்
இவர் ஓர் ஆளுமையுள்ள அதிபர் என்பதற்கு அந்நூரியின் வளர்ச்சியே மிகப் பெரிய சான்று என்றால் மிகையாகாது. ஒரு நல்ல ஒழுக்கமுள்ள குடும்ப பிணைப்பை கொண்ட முனவ்வர் ஹழ்ரத் அவர்களின் அன்புத் தகப்பானரும் தூய தீன் பணிக்காக பெரும் பங்காற்றிய ஒரு மார்க்கப் பிரசாரகர் என்று அவர் எழுதியுள்ளார். இவ்வாறு தலைசிறந்த உலமாக்களுடைய வாழ்க்கை வரலாறுகள் அதிகம் வர வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
அல்ஹாபிழ் அல் அலீம் (அந்நூரி) பட்டம் பெறுபவர்கள்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மது பாயிஸ் முஹம்மது ஸாஜீத்
- அல் - ஆலிம் அப்துர் ரஹீம் முஹம்மத் குமைல்
- அல் - ஆலிம் முஹம்மத் பஸ்லி முஹம்மத் பஸால்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மத் ஸப்வான் ஸஈத் அன்வர்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மது அன்சார் முஹம்மத் அப்துல்லாஹ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மது அனஸ் முஹம்மது இஷhம்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மது பாரூக் முஹம்மது பாலிஹ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் அப்துஸ்ஸலாம் ஷபீஉல்லாஹ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ஸய்னுலாப்தீன் முஹம்மத் ஹம்தான்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் மிஹ்லார் முஹம்மத் ஆதில்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் கலிலுர்ரஹ்மான் முஹம்மத் ஸர்ஜுன்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் தாஜுதீன் முஹம்மத் இல்யாஸ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மத் புர்ஹான் நுஸ்ரி
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மத் றிஸ்வி முஹம்மத் சாஜீத்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஹம்மத் ஜிப்ரீக் முஹம்மத் பாஜீல்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ரிப்தி ரியாழ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் மஸ்பி மக்கீ
- அல் - ஆலீம் அல் ஹாபிழ் அம்ஜத் நிஸார்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் முஸரவ்ப் அஜ்வத்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ஹஸன் மிஹ்லார்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் நஸ்ரூல்லாஹ் ரூஹுல்லாஹ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் அப்துஸ்ஸலாம் நிஸவ்ஸ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் சகீழ் சைபுயூடீன்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ஹுமைத் அஸ்ரப்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் அம்ரின் அப்துல் அஸீஸ்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ஜஸான் ஜாயா
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் அக்ரம் அஸ்கர்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ரஸாத் ரஸாக்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் ருசைக் தரூக்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் சாஜீத் தாஜுதீன்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் நிஸ்ரான் அப்துல் காதிர்
- அல் - ஆலிம் அல் ஹாபிழ் நவ்லான் நஜுமுதீன்
இக்பால் அலி
Add new comment