பாலத்தை உடைத்து பத்துளு ஓயாவுக்குள் கவிழ்ந்த பவுஸர்

புத்தளத்தில் பயங்கரம்

எரிபொருள் பவுஸரொன்று புத்தளம் மாவட்டத்திலுள்ள பத்துளு ஓயாவின் பாலத்தை​ைஉடைத்துக் கொண்டு பத்தளுஓயாவில் வீழ்ந்தது. சுமார் நூறு மீற்றர் தூரம் வரை இது, இழுத்துச் செல்லப்பட்டு ரயில் பாலத்துக்கருகில் வந்து நின்றதாக

முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இந்த எரிபொருள் பவுஸர் புத்தளம்- கொழும்பு வீதியில் ஆனைவிழுந்தாவை எனும் ஊருக்கருகில் பத்துளு ஓயாபாலத்தின் பாதுகாப்பு பக்க சுவர்களை உடைத்துக் கொண்டு பத்துளு ஓயாவில் வீழ்ந்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையால், பத்துளுஓயா ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்தது. இதனால் பவுஸர், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பாலத்தில் மோதி நிறுத்தப்பட்ட எரிபொருள் பவுஸரின் சாரதி மிகுந்த பிரயத்தனத்துடன் ஆசனத்திலிருந்து இறங்கி, ஆசனத்தின் மேல் பகுதியில் ஏறி நின்று காப்பாற்றுமாறு சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து முந்தல் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சாரதியை காப்பாற்றியுள்ளனர்.

 


Add new comment

Or log in with...