பரீட்சை நேரத்திலும் மின்வெட்டு அமுல்

நாட்டின் நிதி நிலமையே காரணம்

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்துண்டிப்பை நிறுத்தமுடியாது என்றும் நாட்டின் நிதி நிலமையே அதற்குக் காரணமெனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை

நடைபெறும் ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மின் துண்டிப்பை மேற்கொள்ளவேண்டாமென கல்வியமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ள போதும், நாட்டின் நிதி நிலமை இதற்கு இடமளிக்கவில்லையென்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி பரீட்சைகள் இடம்பெறும் காலப் பகுதிகளில் தொடர்ந்தும் துண்டிப்பின்றி மின் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டுமானால் மேலதிகமாக ஐந்து பில்லியன் ரூபா செலவாகும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்தத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கான நிலமை மின்சார சபையிடம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அந்த நிதியை வழங்காது கடனுக்கு எரிபொருளை பெற்றுக் கொண்டால் மீண்டும் நாட்டில் எரிபொருள் வரிசை யுகம் உருவாவதை தடுக்கமுடியாது போகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 24 மணித்தியாலமும் தொடர்ந்து மின் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டுமென்பாதாலேயே, மின் கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அந்த திருத்தத்துக்கு இடமளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை கேட்டுள்ளவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மீண்டும் வரிசை யுகம் உருவாவதைத் தடுக்கும் வகையிலேயே அந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...