- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு
பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலாவில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் தொடர்பில்
ஆராய விசேட நிபுணர் குழுவும் நியமிப்பு
நானுஓயா, ரதல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளவர்களுக்கு விரைவாக நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு வழங்கக்கூடிய உச்சளவு நட்டஈட்டை வழங்குவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 20 ஆம் திகதி நானுஓயா, ரதல்ல பகுதியில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானது. அதற்கிணங்க தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த வகையில் வெகுவிரைவில் நட்டஈட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். அதுதொடர்பில் கல்வியமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்தார். பஸ்ஸில் பயணம் செய்யக்கூடிய பிரயாணிகளின் எண்ணிக்ைகயை தீர்மானிக்கவேண்டியது போக்குவரத்து ஆணைக்குழுவே என்றும் அதற்கிணங்க எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக்ெகாள்ளும் வகையில் விரைவாக அறிக்ைகயை பெற்றுத்தருமாறும் வீதி பாதுகாப்பு தொடர்பான நிறுவனத்தின் தலைவர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் நிஸ்ஸங்கவின் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பாடசாலை மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும்போது பின்பற்றவேண்டிய சட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அக்குழு பிரதி பொலிஸ் மா அதிபரின் தலைமையில் நியமிக்கப்படுவதுடன் மொரட்டுவை பல்கலைக்கழகம் கல்வியமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் மேற்படி குழு ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அக்குழுவில் வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் சுமித் நிஸ்ஸங்க, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கலாநிதி பசிந்து, போக்குவரத்து பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புக்ெகாட, கல்வியமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஶ்ரீயாணி ஹேவகே, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் குசலானி டி சில்வா, தேசிய போக்குவரத்து குழுவின் பணிப்பாளர் திருமதி ஷெரின் அத்துக்ேகாரள ஆகியோரும் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைஇடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் அது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment