ஜப்பான் - இந்தியா கூட்டுப் பயிற்சி

ஜப்பான் மற்றும் இந்திய விமானப் படையினர் கூட்டு விமானப் பயிற்சியொன்றை மேற்கொண்டுள்ளனர். இப்பயிற்சி ஜப்பானின் ஹயகுரி விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவடையும் சூழலில் இரு நாடுகளதும் விமானப்படையினர் இக்கூட்டு பயிற்சியை முன்னெடுத்துள்ளனர்.

இப்பயிற்சியை வரவேற்றுள்ள ஹட்சன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் கலாநிதி சட்டொரு நகோ, இக்கூட்டுப்பயிற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய முக்கியத்துவத்தின் முன்னேற்றம் என்றுள்ளார்.

இரு நாடுகளது விமானப் படைகளும் முன்னெடுத்த இக்கூட்டு விமானப்படை பயிற்சியானது இருநாடுகளது இராணுவ ஒத்துழைப்பிலும் புதிய அத்தியாயத்தை திறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...