காஷ்மிர் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் “தீவிரமான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு” பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுடனான மூன்று போர்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டதாகவும் அண்டை நாட்டுடன் அமைதியை விரும்புவதாகவும் டுபாயை தளமாகக் கொண்ட அல் அரபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காஷ்மிர் போன்ற எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேசையில் அமர்ந்து தீவிரமான மற்றும் நேர்மையான முறையில் பேசுவோம் என்ற செய்தியை இந்தியத் தலைமை மற்றும் பிரதமர் மோடிக்கு நான் விடுக்கிறேன். நிம்மதியாக வாழ்ந்து முன்னேற்றம் காண்பது அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டை பிடித்து நேரத்தையும் வளத்தையும் வீணடிப்பது எமது கையிலேயே உள்ளது” என்று ஷரீப் தெரிவித்தார்.
Add new comment