- தனது ஒரு அமைச்சை இழந்த மஹிந்த அமரவீர
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (19) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அந்த வகையில்,
ஜீவன் தொண்டமான்: நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
பவித்ரா வன்னியாராச்சி: வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சர்
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார்.
விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சராக இதுவரையில் கடமையாற்றி வந்த மஹிந்த அமரவீர, தற்போது வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் இன்று (19) சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதியினால் மற்றுமொருவரை அப்பதவியில் நியமிப்பதற்காகவே தாம் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், அவர் தொடர்ச்சியாக விவசாய அமைச்சராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment