அனைத்து ஆதிவாசிகள் தலைவருடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வோம்

– காட்டுவாசி தலைவர் வன்னிலா அத்தோ தெரிவிப்பு
- அனைத்து வசதிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளிப்பு

நாடு முழுவதிலும் உள்ள சகல ஆதிவாசிகள் தலைவர்களுடன் 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதாக, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த அழைப்பை ஏற்று நேற்றையதினம் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தன்னைச் சந்தித்த ஆதிவாசிகள் தலைவரிடம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...