சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு செப்டெம்பர் வரை உதவித் தொகை

சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2023 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட பண கொடுப்பனவு நிவாரணத்தை, மே முதல் செப்டெம்பர் வரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது இடம்பெறும் ஆய்வுகள் முடிவடைந்து, உத்தேச புதிய நலன்புரித்திட்டம் அறிமுகப்படுத்தும் வரை குறித்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழலில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்கள் முகங்கொடுக்கின்ற நேரிடுகின்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, இவ்வருடம் (2023) ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளைப் பூர்த்தி செய்து, உத்தேச புதிய நலன்புரி நன்மைகளை அறிமுகப்படுத்தும் வரை, சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட, சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள நிதிக் கொடுப்பனவை இவ்வருடம் மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரைக்கும் மேலும் ஐந்து (05) மாத காலத்திற்கு நீடிப்பதற்கு தேவையான நிதியொதுக்கீட்டை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய நலன்புரி நன்மைகளை செலுத்தும் முன்மொழிவு முறைமையை துரிதமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்காக புதிய தகைமைகாண் மற்றும் அளவுகோல்களைப் பயன்படுத்தி பயனாளிகளை அடையாளங் காண்பதற்கான கணக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...