ஐ.ம.ச. கொழும்பு மேயர் வேட்பாளராக முஜீபுர் ரஹ்மான்

- A.H.M பௌஸி MPஆக வாய்ப்பு

கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் களமிறங்க உள்ளார். இந்நிலையில் வெற்றிடமாகும் இப்பதவிக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி பட்டியலில் அடுத்ததாக உள்ளதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற உயர்நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டினால், முஜீபுர் ரஹ்மான தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் களமிறக்கப்படவுள்ளார் என கொழும்பில் இடம்பெற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் தினங்களில் தேர்தல் உறுதிப்படுத்தப்பட்டவுடன், முஜிபுர் ரஹ்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...