செயலாளரை வரவழைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அவரது சுயவிருப்பின் பேரில் சமுகமளிக்கலாமே தவிர, அவரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வரவழைப்பதற்கான எத்தகைய அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாதென சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தல் ஆணைக்

குழுவின் தலைவரோ அல்லது பணிப்பாளர் நாயகமோ பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரை ஆணைக்குழுவுக்கு அழைப்பது சட்டவிரோதமான செயல் என்றும் அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணத்தை பொறுப்பேற்க வேண்டாமென மாவட்டச் செயலாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள கடிதங்கள் தொடர்பில், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரை அழைத்து விளக்கம் கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையிலேயே மேற்படி சிரேஷ்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சட்டமா அதிபரை தவிர்த்து வேறு சிரேஷ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளமையும் பெரும் குற்றமாகுமென்றும் அதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கத்தினால் முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியோ அலலது அரசாங்கமோ தேர்தல் ஆணைக்குழுவுக்கு எத்தகைய அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...