தேர்தலை இடைநிறுத்தக்கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை இடைநிறுத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணலான டபிள்யு எம். ஆர். விஜேசுந்தர உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர், நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு  10 பில்லியன் ரூபா செலவாவதாகவும் அது அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் அல்லது கடன் பெற்றுக்கொள்வதை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தமக்கு அறிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற கேர்ணல் விஜயசுந்தர உச்ச நீதிமன்றத்தில் ரிட்மனுவொன்றை தாக்கல்செய்து தகவல் சமர்ப்பித்துள்ளார். அரசியலமைப்பின் 140வது சரத்திற்கிணங்க உச்சநீதிமன்றத்தில் அந்த ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் ஓய்வுபெற்ற கேர்ணல் விஜயசுந்தர தெரிவித்துள்ளதாவது, இத்தகைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்தவித முன்னேற்றமும் கிடைக்காது. ஒரு அரசியல் கட்சி தேர்தலை கோரும் நிலையில் மேலும் தரப்பினர் தேர்தல் நடத்துவதற்கு பணம் கிடையாதென ஊடகங்கள் மூலம் தெரிவித்துவருகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கும் விதத்தில் தேர்தலை நடத்துவதென்றால் ஆகக்குறைந்தது 10 பில்லியன் ரூபா செலவாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தகவலறியும் சட்டத்தின் மூலம் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? அது பணமாக கையிருப்பில் உள்ளதா? என நான் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டிருந்தேன்.

அதற்குப் பதிலளித்துள்ள ஆணைக்குழு, சாதாரணமாக தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா செலவாவதாகவும் அது அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் அல்லது கடன் பெற்றுக்கொள்வதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படும் என பதிலளித்திருந்தது.

எவ்வாறாயினும் அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் மனுதாரரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய வருமான நிலைமை, சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் சர்வதேச கடன்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் மனுதாரர் விடயங்களை முன்வைத்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...