அனுமதிப்பத்திரங்களை வழங்க நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் துரித சேவை பிரிவு

- அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கும் One-Stop Unit

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் செயன்முறையைத் துரிதப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களைத் தயார்படுத்தும் செயன்முறையை மேம்படுத்தி ஒரே இடத்தில் (One-Stop Unit) அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அலகொன்றை நிறுவுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...