தரம் 02 - 11 இற்கு மாணவர்களை சேர்ப்பதில் புதிய பொறிமுறை

- அனைத்து மாணவர்களுக்கும் நியாயமானதும் சமமானதுமான வாய்ப்பு

பாடசாலைகளில் தரம் 02 தொடக்கம் 11 வரைக்கும் மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய பொறிமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் ஒழுங்குமுறைப்படுத்தி தரம் 06 தவிர்ந்த, இடைத்தரங்களில் பாடசாலையை மாற்றுவதற்கு உண்மையான தேவையுடையவர்களை அடையாளங்கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமானதும் சமமானதுமான வாய்ப்புக்கள் கிடைக்கும் வகையில் புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது காணப்படுகின்ற தரம் 01 - 05 வரை ஒரு வகுப்பில் உச்சபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், மற்றும் தரம் 06 - 11 வரை ஒரு வகுப்பிற்கு உயர்ந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆகவும் என காணப்படுகின்ற பொறிமுறையை மாற்றியமைக்காமல் மேற்கொண்டு செல்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...