நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் புத்தாண்டை எதிர்கொள்வோம்

- பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புத்தாண்டில் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும், குதூகலத்துடனும் நுழைகிறோம். 2022 ஆம் ஆண்டு நமது பெரும்பாலான மக்களுக்கு கடினமாக இருந்த போதிலும், பல சவால்களுக்கு மத்தியிலும் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் புத்தாண்டை எதிர்கொள்ள வேண்டும்.

குறிப்பாக உணவு பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

இந்த புத்தாண்டில் வளமான தேசத்தை உருவாக்குவதன் பொருட்டு, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான உத்திகளை நாம் ஒன்றிணைந்து பின்பற்றுவோம்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு


Add new comment

Or log in with...