கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம்

- ஜனவரி 01 முதல் நடைமுறை

கொன்சியூலர் சேவைகளான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சான்றுறுதிப்படுத்தலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை கொன்சியூலர் அலுவலகம், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சான்றுறுதிப்பபடுத்தலுக்கான கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2022 நவம்பர் 16ஆம் திகதிய 2306/35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைவாக, 2023 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இக்கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு மற்றும் அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களின் ஊடாக சான்றுறுதிப்படுத்தப்படும் சான்றிதழ்கள் / ஆவணங்களுக்கான புதிய கட்டண விபரங்கள் பின்வருமாறு:

கொன்சியூலர் அலுவல்கள்   கட்டணம் (ரூ)

  • பரீட்சைகள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் சான்றிதழ்கள் - ரூ. 800
  • வெளிநாட்டு பிரஜைகளுக்காக இலங்கை அரசினால் விநியோகிக்கப்படும் ஏதேனும் ஆவணம் - ரூ. 3,000
  • ஏதேனும் ஏற்றுமதி ஆவணம் - ரூ. 8,000
  • ஏனைய ஆவணம் - ரூ. 1,200

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், திருத்தப்பட்ட கட்டண விபரங்கள் தொடர்பில் 16.11.2022 திகதிய 2306/35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை கருத்திற்கொள்ளவும்

PDF icon Gazette-2306-35.pdf (1.1 MB)

PDF File: 

Add new comment

Or log in with...