ஜனவரி 01 முதல் விமான பயணிகள் கவனத்திற்கு

- நாட்டிலிருந்து வெளியேறுவோர், நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டை விட்டு வெளியேறும் போதும், நாட்டுக்கு வருகை தரும்போதும், விமான பயணத்தின் போது பூர்த்தி செய்ய வேண்டிய வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணையத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் ஜனவரி 01 முதல், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page) www.immigration.gov.lk ஊடாக குறித்த தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டுமென, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவ்வசதி ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதோடு, பயணிகள் புறப்படும் அல்லது வருகை தருவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் இத்தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் தாமதங்களை தவிர்ப்பதற்காக, குறித்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக,  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...