“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக”

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” - லூக்கா 2:14 

கிறிஸ்து பிறந்த திருநாள் இன்றாகும். இயேசு கிறிஸ்து பிரான் எப்பொழுதும் மக்களுக்கு பணக்காரர், ஏழை என்ற வேறுபாடு காட்டாத ஒரு உன்னதத் தலைவராவார். அவர்கள் இறைவனின் குழந்தையாக இந்தப் பூமியில் பிறந்த நாளில், மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பாளர்கள், தேவதூதர்கள் அவர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வந்ததாக எடுத்துக்கொண்டனர்.

மிகவும் சவாலுக்கு மத்தியில் முழு உலகமும் நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் இந்நாளில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் இறைவனின் நித்திய ஆன்மீக சுகம் மற்றும் அமைதி இலங்கையைச் சேர்ந்த  கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் நிச்சயமாகக் கிடைக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

சுறுசுறுப்பான வாழ்கை முறையில் இந்த நத்தார் தினத்தைக் கொண்டாடும் உங்கள் அனைவரும், வெறுமனே லௌகீகத்தைப் பின்தொடர்ந்து செல்லாமல், ஆன்மீக ரீதியான ஆறுதல், இறைவனின் ஆசிர்வாதத்தைப் பெறக்கூடிய, இறைவனால் நேசிக்கப்பட்ட மனிதர்களாக வாழப் பிராத்திக்கிறேன்!

மஹிந்த யாப்பா அபேவர்தன,
சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்.
2022.12.25


Add new comment

Or log in with...