சிறையிலிருந்த வசந்த முதலிகே வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே நேற்று (23) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே, ஒகஸ்ட் 19ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, வசந்த முதலிகேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையிலேயே அவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...