டிசம்பர் 26 திங்கட்கிழமை மேலதிக அரசாங்க விடுமுறை

- பொது நிர்வாக அமைச்சர் எனும் வகையில் பிரதமர் அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்க விசேட  விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில், அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமையை (26) அரசாங்க விசேட விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடுமுறையை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எனும் வகையில், அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் இவ்வாலோசனையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...