உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குறைப்பு

நியாயமானது என்கிறார் அங்கஜன் எம்.பி

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கை நியாயமானதென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் சாவகச்சேரிப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது உள்ளூராட்சி சபைகளில் நான்காயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் எட்டாயிரம் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.இன்றைய காலகட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதே அரசாங்கத்துக்கு பாரிய சுமையாக காணப்படுகிறது.

கடந்த காலத்தில் நான்காயிரமாக இருந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் தொகையே தற்போது இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மறுபடியும் உறுப்பினர்களைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளது என அவர் தெரிவித்திருந்தார்.

சாவகச்சேரி விஷேட நிருபர்


Add new comment

Or log in with...