டயானா கமகேவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி ஒதுக்கீடு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 2023 ஜனவரி 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி ஒதுக்கியுள்ளது.

குறித்த மனு இன்று (12) மேன்முறையீட்டு நீதிசர்களாக சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த தீர்மானம் அறிவிக்க்பபட்டது.

மனுதாரர சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பர்மன் காசிம் ஆகியோர், இந்த மனு தொடர்பான வழக்கை அவசர வழக்காக கருதி, விரைவில் விசாரணை நடத்துவதற்கான திகதிய நிர்ணயம் செய்யுமாறு கோரியிருந்ததைத் தொடர்ந்து குறித்த திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...