பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும்

மோசமான வானிலை காரணமாக கடந்த திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளும், திங்கட்கிழமை (12) மீண்டும் வழமைபோல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

காற்றின் தர மட்டங்களில் அசாதாரண வீழ்ச்சி காரணமாக, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 09 ஆம் திகதி மூடப்பட்டன.

காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், திங்கட்கிழமை (12) முதல் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...