4,000 கிலோ பீடி இலைகளுடன் 08 இந்தியர் ஆழ்கடலில் கைது

இரண்டு நாட்டுப் படகுகளும் கடற்படையினர் வசம்

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த 4,000 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு மீன்பிடி படகுகளை வட மேற்கு கடலில் கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கைக்கு வடமேற்கு புறமாகவுள்ள இலங்கை கடல் எல்லையில் இலங்கை கடற்படை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக இந்நாட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருந்த 4,000 கிலோ பீடி இலைகளை

கொண்டு வந்த இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை எட்டு இந்தியர்களுடன் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடற்பாதையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்நாட்டு கடல் மற்றும் கடற்கரைகளை இணைத்ததாக கடற் படையினர் ரோந்து நடவடிக்கை மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி மேற்கு கடற்படை கட்டளை பிரிவினருடன் இணைந்த இலங்கை கடற்படை கப்பல் சுரணிமல மூலம் வடமேற்கு கடற்பரப்பில் 2022 டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சர்வதேச கடல் எல்லையை மீறி கல்பிட்டி கதிரமலைமுனைக்கு அருகில் இந் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்த சந்தேகத்துக்கு இடமான இந்திய இரண்டு கடற்படை படகுகள் அவதானிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன. அவ்வேளையில் அந்த இரண்டு இந்திய மீன் பிடிப்படகுகளில் 128 பொதிகளில் பொதி செய்யப்பட்டு சட்டவிரோதமாக இந்நாட்டுக்குள் கொண்டு வந்த 4000 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு மீன்பிடி படகுகளையும் 08 இந்திய சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினார்கள்.

இலங்கை கடற்படை 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக இந்நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து 15,000 கிலோ பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதோடு , இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படை எதிர்காலத்திலும் இந்நாட்டு கடல் வலயத்தில் அடிக்கடி அவதானிப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

 


Add new comment

Or log in with...