டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாது

கெமுனு விஜேரட்ண திட்டவட்டமாக அறிவிப்பு

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாக மாறியுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கமைய, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் எற்படவில்லை. அதே விலைகள் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை குறைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண, இந்த வில குறைப்பு பஸ் கட்டணங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய அளவில் இல்லையெனக் குறிப்பிட்டார். ஒரு லீற்றர் டீசலின் விலை 35 முதல் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...