நள்ளிரவு முதல் டீசல் விலை ரூ. 10 இனால் குறைப்பு

- ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை

இன்று நள்ளிரவு (06) முதல் ஒட்டோ டீசலின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய,
ஒட்டோ டீசல்: ரூ. 430 இலிருந்து ரூ. 10 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 420

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,

  • பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 370
  • பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 510
  • சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ. 510
  • தொழிற் பயன்பாட்டு மண்ணெணெண்ணெய் - ரூ. 464
  • மண்ணெண்ணெய் : ரு. 365

குறித்த விலைக்கு நிகராக, LIOC எரிபொருட்களும் விலைகளும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த நவம்பர் 12 முதல் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலைகள் லீற்றருக்கு முறையே ரூ. 25 மற்றும் ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னதாக ஒக்டோபர் 17 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் விலைகள் முறையே ரூ. 40, ரூ. 15 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஒக்டோபர் 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் 95 விலைகள் முறையே ரூ. 40, ரூ. 30 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

ஓகஸ்ட் 22ஆம் திகதி மண்ணெண்ணெய் விலை ரூ. 253 இனால் அதிகரித்து ரூ. 340 ஆக திருத்தப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 


Add new comment

Or log in with...