உலகக் கிண்ணத்தில் வெவ்வேறு அணிகளுக்கு ஆடும் சகோதரர்கள்

இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் உடன்பிறந்த இரு சகோதரர்கள் இரு வெவ்வேறு அணிகளுக்கு ஆடி வருகின்றனர்.

20 வயது நிக்கோ வில்லியம்ஸ் ஸ்பெயினுக்கு விளையாடுகிறார். அவரது மூத்த சகோதரரான 28 வயது இனாகி வில்லியம்ஸ் கானாவிற்கு விளையாடுகிறார்.

இருவரும் ஸ்பெயினில் பிறந்தவர்கள். கானாவைச் சேர்ந்த அவர்களின் பெற்றோர் ஸ்பெயினுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். எனினும் உலகக் கிண்ணக் கால்பந்து வரலாற்றில் வெவ்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்து விளையாடும் 2ஆவது சகோதரர்களாக இவர்கள் உள்ளனர்.

2010, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் சகோதரர்களான ஜெரமியும் மற்றும் கெவின் பிரின்ஸ் ஆகியோர் முறையே ஜேர்மனி மற்றும் கானா அணிகளுக்கு ஆடினர்.


Add new comment

Or log in with...