2023 முதல் A/L பரீட்சைக்கு தோற்ற 80% பாடசாலை வருகை மீண்டும் கட்டாயம்

- 2022 A/L மாணவர்களுக்கே சலுகை என்கிறது கல்வி அமைச்சு

2023ஆம் ஆண்டு முதல், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரினால் 2022 ஓகஸ்ட் 12ஆம் திகதியிடப்பட்ட ED/09/Ads (SA)/7 எனும் கடிதம் மூலம் 2022 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரம் 80% வருகைப் பதிவை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த விலக்களிப்பு 2022 கா.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதால், 2023 ஆம் ஆண்டு முதல் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை கட்டாயம் என்பதை கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே இருந்து வந்த குறித்த நடைமுறை, நாட்டில் ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, இவ்வாறு தளர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...