பண்டைய ரோமனிய ரசிகர்கள் உண்ட உணவுகள் கண்டுபிடிப்பு

பண்டைய ரோமானிய கிளாடியோட்டர் அரங்கான க்ளோசியமில் போட்டிகளை பார்வையிட வந்த ரசிகர்கள் பழங்கள், கொட்டை வகைகள், ஒலிவ் காய்களை சாப்பிட்டிருக்கக் கூடும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் தளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் திராட்சைகள், செர்ரிப் பழங்கள், வாதுமை கொட்டைகள் போன்ற உணவுத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கரடி மற்றும் சிங்கங்களின் எலும்புகளையும் ஆகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விலங்குகள் அந்த அரங்கில் வேட்டையாடும் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

2,000 ஆண்டு பழமையான தளத்தை ஆராய்ந்தபோதே ஆராச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மூலம் பண்டைய காலத்தில் இந்த அரங்குக்கு வந்த ரசிகர்களின் அனுபவம் மற்றும் பழக்கங்களை கண்டறிய முடிவதாக ஆய்வாளர்கள் தெரிக்கின்றனர்.

க்ளோசியம் ரோமானிய பேரரசின் மிகப்பெரிய அரங்கமாக இருந்ததோடு அது கி.பி 523 வாக்கில் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. கிளாடியேட்டர்கள் சண்டையிடும் போட்டிக்கு இந்த அரங்கு பிரபலமானதாகும்.


Add new comment

Or log in with...