Friday, November 25, 2022 - 1:40pm
மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா விளையாட்டுக் கழகம் நடத்திய 2022ஆம் ஆண்டுக்கான கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் குருக்கள் மடம் ஏஸியன் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு எவசைன் விளையாட்டு கழகத்துடனான இறுதிப் போட்டியில் 3–2 என்ற செட் அடிப்படையில் குருக்கள் மடம் ஏஸியன் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்
Add new comment