மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் நேற்று வீடு திரும்பினார். கமல்ஹாசன் தீவிரமாக படபிடிப்பில் ஈடுபட்ட வந்த நிலையில் சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்து வந்தது. இதன் காரணமாக முழு உடல் பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட கமல் நேற்று வீடு திரும்பினார்.

68 வயதிலும் உடற்பயிற்சியினால் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொண்டு நடித்து வருகிறார் அவர். சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவற்றில் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் உண்டு. சமீபத்தில் அவர் ஹைதராபாத் சென்று வந்தார். சென்று வரும்போதே அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. சென்னையில் தங்கியிருந்த கமலுக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக மருத்துவரை பார்த்த நிலையில் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் படப்பிடிப்பு, பிக்​ெபாஸ் நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்பதால் உடல் பரிசோதனை செய்ய முடிவெடுத்தார்.

உடனடியாக போரூர் ராம்ச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சளி, காய்ச்சலுக்காக உடல் பரிசோதனையும், வேறு ஏதாவது பிரச்சினை இருக்க வாய்ப்பிருந்தால் அதையும் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் இரவு முழுக்க அனுமதிக்கப்பட்டார்.

நேற்றுக் காலை முழு உடல் பரிசோதனைக்கு பின் ஓரிரு நாள் ஓய்வு எடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து நேற்று காலை கமல்ஹாசன் வீடு திரும்பினார். கமலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பிக்​பாஸ் நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. காரணம் கொரோனாவின் போது மருத்துவமனையிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் நடத்தியதாக கமல் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...