அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள வோல்மார்ட் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

களஞ்சிய முகாமையாளர் என நம்பப்படும் அந்த துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். எனினும் தாக்குதலுக்கான நோக்கம் உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை இரவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சோகமான நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாக அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான வோல்மார்ட் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலொராடா மாநிலத்தில் உள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் 17 பேர் காயமடைந்த சில நாட்களிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள வோல்மார்ட் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர்.


Add new comment

Or log in with...