மஹஜன சம்பத 5,000ஆவது சீட்டிழுப்பு; முதல் சீட்டு ஜனாதிபதிக்கு விற்பனை

ஐந்தாயிரமாவது மஹஜன சம்பத லொத்தர் சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு (டிக்கெட்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விற்பனை செய்யும் நிகழ்வு இன்று (24) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, ஜனாதிபதியிடம் குறித்த சீட்டை (டிக்கெட்) கையளித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தேசிய லொத்தர் சபையின் பொது முகாமையாளர் சட்டத்தரணி ஹஷினி ஜயசேகர, பணிப்பாளர் குழு உறுப்பினர்களான டி.டி. ஜயசிறி, சட்டத்தரணி அசங்க ரந்தெனிய, உதவிப் பொது முகாமையாளர் (விற்பனை) மெனுர சதுரங்க, உதவிப் பொது முகாமையாளர் (கொள்முதல்) சுனெத் ஜயவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...