TikTok பல இலங்கையர்களிடையே பிரபலமாகியுள்ளது, ஏனெனில் இது நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கிற்கு எவ்விதத்திலும் குறையே இல்லாத ஒரு சுவாரஸ்யமான தளமாகும். TikTok இல் பல பாவனையாளர்களின் கருத்துக்களை அறிய இன்று நாம் தேர்ந்தெடுத்தது பல திறமைகளைக் கொண்ட சேதனா கெடகொடவை ஆகும்.
ஒரு சட்டத்தரணி, டப்பிங் கலைஞர் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவருமான சேதனா, TikTok இல் வேடிக்கையான வீடியோக்கள், பாடல்கள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துள்ளார்.
அவரது நகைச்சுவை உணர்வு, சிறந்த உதடு அசைவு திறமை மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றின் காரணமாக சேதனா 8 மில்லியனுக்கும் அதிகமான Likes களையும் 411.2 மில்லியன் Followers களையும் கொண்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளார். அவர் பல துறைகளைக் கொண்டவர் என்றாலும், தரமான படைப்பாற்றல்களின் மீதான அவரது ஆர்வம் அவருடைய உள்ளடக்கத்தை மிகவும் ஈர்க்கக்கூடியதாக ஆக்குகிறது.
சேதனா கெட்டகொட என்பவர் யார்?
எனக்கு 30 வயதாகிறது. தொழில் ரீதியாக நான் ஒரு சட்டத்தரணி, இந்தி மொழி ஆசிரியர், விளம்பரங்களுக்கு சிறந்த குரல் வழங்குதல் மற்றும் டப்பிங் கலைஞராக பணியாற்றுகிறார். TikTok, Youtube, Instagram, Facebook மற்றும் Twitter ஆகிய ஐந்து தளங்களில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவராகவும் இருக்கிறேன். இந்தச் செயல்கள் அனைத்தையும் நான் அன்றாடம் கையாள்வதால், அது என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.
TikTok ஐ எப்படி கண்டுபிடித்தீர்கள், அதில் உள்ளடக்கத்தை எப்போது உருவாக்கத் தொடங்கினீர்கள்?
TikTok பற்றி 2016 இல் அறிந்தேன். எனது LLB பட்டத்தின் போது இந்த App Musical.ly என்று அழைக்கப்பட்டது. Dubsmash என்று அழைக்கப்படும் மற்றொரு Appம் இருந்தது, ஆனால் இசை மற்றும் நகைச்சுவை அடிப்படையில் Musical.ly ஐ விரும்பினேன். எனக்கு டப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும், கடந்த 20 வருடங்களாக டப்பிங் துறையில் இருக்கிறேன். எனவே இது சம்பந்தமாக உள்ளடக்கத்தை உருவாக்குவதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
எனது தொழில் மற்றும் கல்விப் பணிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட TikTok ஒரு நல்ல உதவியாக இருந்தது என்று நினைக்கிறேன்.
உங்கள் TikTok உள்ளடக்கத்திற்கு எப்படி பெயரிடுவீர்கள்?
இது மிகவும் மாறுபட்டது, ஆனால் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் பாடலகள் ஆகும்.
TikTok பாவனையாளராக, நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள்?
நான் எப்போதும் எந்த விஷயத்திலும் ஆக்கப்பூர்வமாக பார்க்க விரும்புகிறேன். நம்பமுடியாத வகையில் பெண்ணாக மாற்றும் Plastique Tiara என்ற உள்ளடக்கத்தை உருவாக்குபவர் இருக்கிறார். அது அதே நபரா என உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.
நான் பேசுவது, நடனமாடுவது மற்றும் பாடுவது போன்ற வீடியோக்களை விரும்புகிறேன். இது படைப்பாற்றல் என்றால் நான் அதை ரசிக்கிறேன்.
TikTokல் யாரைப் பின்பற்றுகிறீர்கள்?
நான் Quick Style அணி, Jason Derulo, Fash, Simpal Kharel, Lily Singh மற்றும் உண்மையில், சர்வதேசத்திற்குச் சென்ற சில இலங்கை TikTok களில் ஒருவரான காயத்திரி போன்ற பல சர்வதேச கணக்குகள் பின்பற்றப்படுகின்றன. நான் DermDoctor, Pierson மற்றும் Adam என்ற நகைச்சுவை நடிகரையும் பின்தொடர்கிறேன்.
இலங்கையிலிருந்து லோச்சனா ஜயகொடி, ஹர்ஷனி யுத்கனா, கவிந்து மதுஷான், சாஷா கருணாரத்ன, குமலிந்த, தேனாதி புஸ்ஸேகொட, Travel with Wife, Blok & Dino மற்றும் காளி ஆகியோரையும் நான் பின்தொடர்கிறேன்.
TikTok இல் உள்ளடக்கத்தை உருவாக்க விரும்பும் எவருக்கும் நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?
TikTok இன் சிறந்த விடயம் என்னவென்றால், அது படைப்பாற்றல் மிக்கவர்களைத் தொடர ஊக்குவிக்கிறது. எந்த உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து, நீங்களே பதிவு செய்யலாம். இதை நீங்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மேற்கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் உண்மையில் எதில் சிறந்தவர் என்பதை முடிவு செய்வதுதான்.
TikTok இன் பயத்தால் திறமையானவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் அப்படி பயப்பட வேண்டாம்! TikTok ஆனது உங்கள் கணக்கை நிர்வகிப்பதற்கான பல்வேறு சமூக வழிகாட்டுதல்கள், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பல தேர்வுகளைக் கொண்டுள்ளது.
இந்த App மூலம் நான் தனிப்பட்ட முறையில் நிறைய விடயங்களை பெற்றுள்ளேன். அது என் வாழ்க்கையில் செய்த விஷயங்களில் நல்ல நண்பர்கள் மற்றும் ஒரு படைப்பு உலகத்திற்கான அணுகல் என்றே சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் இப்போதே படைப்பாற்றல் தளத்தில் நுழைந்து, அந்த சுவாரஸ்யமான அனுபவத்தைப் பெறுவதன் மூலம் உங்கள் திறமைகளை பட்டை தீட்ட முடியும்.
Add new comment