ஓமான் ஆட்கடத்தல்; மேலும் இருவர் கைதாகி டிசம்பர் 01 வரை விளக்கமறியலில்

பெண்களை சட்டவிரோதமாக ஓமான் நாட்டுக்கு அனுப்பிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்லேகல மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மனித கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளரான குஷான் ராஜதந்திர சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் இலங்கை வந்தவுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...